TVK Govt Day 53: தவெக எம்.எல்.ஏ குதிரை பேரம் விவகாரம் - திமுக கடும் எதிர்ப்பு

By The Hindu

Community Score: 50% | 55 views | 1w

0 community ratings: null thumbs up, null thumbs down

100 Days of TVK Government| Day 53 |July 01| TVK MLA Bribery Allegation Sparks Political Storm தவெக எம்.எல்.ஏ இளையராஜாவை குதிரை பேரம் மூலம் இழுக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக மீது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தரப்பு மறுத்துள்ளது. குதிரை பேரம் தொடர்பான வழக்கு முழுக்க அரசியல் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டதாக திமுக தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மனித உயிர்களை காக்க இரவு பகலின்றி பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் முதல்வர் விஜய் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தவெகவுக்கு ஆதரவு அளித்த தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் கோவளத்தில் நடைபெற்றது. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், புதிய கூட்டணி அமைப்பது மற்றும் அதற்கான பெயர் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. #TVK

Tags: the hindu, the hindu news, TVK, CM vijay, Vijay, tamilnadu government, politics, TVK vs DMK, HorseTrading, AllianceTalks, VCK, MDMK, Governance, Chennai, Congress, PMModi, NationalDoctorsDay, MLA, nirmal kumar, Dmk

More from The Hindu

  • U.S.-Israel strike Iran: What really happened| Explained — Score: 50%
  • Thiruvananthapuram: CEO Ratan Khelkar updates on nominations and poll readiness — Score: 50%
  • BREAKING: Supreme court rules only Hindus, Sikhs and Buddhists eligible for scheduled caste status — Score: 50%
  • PM Modi addresses Rajya Sabha Budget session on West Asia crisis — Score: 50%
  • Mamata Banerjee accuses Election Commission of bias, shows BJP symbol on official letterhead — Score: 50%
  • Anil Antony outlines vision for kerala polls; claims anti-incumbency, highlights development push — Score: 50%